Category: சினிமா

  • நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார் – பிரபலங்கள் இரங்கல்

    நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார் – பிரபலங்கள் இரங்கல்

    நடிகர் மயில்சாமி 1984 ஆம் ஆண்டு தாவணி கனவுகள் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்க்கு அறிமுகமானார். பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள். தூள், கில்லி, எல்கேஜி உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

    actor vivek and actor mayisamy combo

    இந்நிலையில், இன்று (19-02-2023 ஞாயிற்றுக்கிழமை) காலை மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அவர் இறந்த செய்தி கேட்டு பலரும் வருத்தம் அடைந்துள்ளனர். தமிழ் திரையுலகில் மிக முக்கிய அங்கமாக இருந்த அவர், மழை மற்றும் புயல் காலங்களில் மக்களுக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.

  • Vijay Antony: நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? – அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல் டுவீட்

    Vijay Antony: நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? – அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல் டுவீட்

    அறுவை சிகிச்சைக்குப் பிறகு Vijay Antony யின் முதல் ட்வீட் வைரலானது: ‘எப்போதையும் விட மகிழ்ச்சியாக உணர்கிறேன்..’

    நேற்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 90 சதவீதம் குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அவரது உடைந்த தாடை மற்றும் மூக்கு எலும்புகள் ஒன்றாக இணைந்துள்ளன. முன்பை விட மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்றார். அதற்கான காரணம் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    நடிகர் விஜய் ஆண்டனி சமீபத்தில் மலேசியாவில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் 90 சதவீதம் குணமடைந்து விட்டதாகவும், பிச்சைக்காரன் 2 (pichaikkaran 2) படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளதாகவும் விஜய் ஆண்டனி ட்வீட் செய்துள்ளார்.

    நடிகர் விஜய் ஆண்டனி தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். பல படங்களில் ரசிகர்களுக்கு சுறுசுறுப்பான பாடல்களை கொடுத்த இவரின் பின்னணி இசை எப்போதும் தலை நிமிர்ந்து நிற்கிறது. ஒரு கட்டத்தில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

    pichaikkaran movie poster

    விஜய் ஆண்டனியின் கேரியரில் பிச்சைக்காரன் (pichaikkaran) சிறந்த படமாக அமைந்தது. இந்த கேரக்டரில் உடல்நிலை சரியில்லாத தாயை பிச்சை எடுக்கும் மகனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த படத்தின் வரவேற்புக்கு பிறகு தற்போது படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

    இந்த இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்று வரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு மலேசியாவில் ஸ்கை ஜெட் விமானம் ஓட்டும் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானார். இந்த விபத்தால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து, சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். முகத்தில் பல காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு, அவர் விரலை உயர்த்தி, அவர் நலமாக இருப்பதாகவும், விரைவில் தனது ரசிகர்களுடன் பேசுவதாகவும் கூறினார்.

    நேற்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 90 சதவீதம் குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அவரது உடைந்த தாடை மற்றும் மூக்கு எலும்புகள் ஒன்றாக இணைந்துள்ளன. முன்பை விட மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்றார். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பிச்சைக்காரன் 2 படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், அதனால் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாகவும் அவர் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார். பிச்சைக்காரன் வெளியாகி பெரும் விமர்சனங்களையும் வசூலையும் பெற்ற நிலையில், தற்போது பிச்சைக்காரன் 2 படமும் அதே வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • தனுஷின் “வாத்தி” பட இசை வெளியீட்டு விழா – முழு விவரம்…

    தனுஷின் “வாத்தி” பட இசை வெளியீட்டு விழா – முழு விவரம்…

    தனுஷின் புதிய படமான “வாத்தி”யின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நாகவம்சியின் சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மூலம் தனுஷ் நடித்துள்ள தமிழ்-தெலுங்கு திரைப்படம் “வாத்தி”. இப்படம் தமிழில் “வாத்தி” (vaathi) என்றும் தெலுங்கில் “சார்” (sir) என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

    கல்வி சார்ந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 5, 2022 அன்று தொடங்கியது.

    படத்திற்கு யுவராஜ் ஒளிப்பதிவாளராகவும், நவீன் நூலி எடிட்டராகவும், ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பாளராகவும் பணிபுரிகின்றனர்.

    இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன்,சாய் குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா ஆகியோர் நடிக்கிறார்கள்.

    படத்தை பிப்ரவரி 17-ம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.தயாரிப்பாளர் லலித் குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமத்தை பெற்றுள்ளார்.

    இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய் லியோ நகரில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

  • ‘thalapathy 67’ படப்பூஜை பிரம்மாண்ட வீடியோ வெளியீடு…

    ‘thalapathy 67’ படப்பூஜை பிரம்மாண்ட வீடியோ வெளியீடு…

    விஜய் நடிப்பில் உருவாகும் ‘thalapathi 67’ படத்தின் படப்பூஜை நிகழ்ச்சியின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  இதை ரிபீட் மோடில் ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

     

    thalapathy 67 pooja photos 2

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 67 படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்றது. தற்போது பூஜை வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், வீடியோ உடனடியாக வைரலாகி வருகிறது.

    thalapathy 67 pooja photos 1

    இப்படத்தின் அப்டேட் இந்த வாரம் வெளியாகும் என படக்குழு கூறியுள்ள நிலையில், அவர்கள் கூறியதை அப்படியே காப்பாற்றி ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர்.  இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர், இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலிகான், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், இயக்குனர் கவுதம் மேனன், அர்ஜுன் ஆகியோர் இணைந்துள்ளனர்.

    thalapathy 67 pooja photos 3

    இந்த நிலையில் படத்தின் நாயகி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தற்போது அது திரிஷா தான் என்பது உறுதியாகியுள்ளது. 14 வருடங்களுக்கு பிறகு விஜய் மற்றும் திரிஷா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இதற்கு முன் இவர்கள் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விக்ரம் பட பாணியில் டீசர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது பூஜை வீடியோ வெளியாகியுள்ளது. இந்நிலையில் டைட்டில் டீசர் பிப்ரவரி 3ம் தேதி வெளியாகும் என பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

    தளபதி 67 படத்தின் பூஜை வீடியோவில் நிறைய அழகான தருணங்கள் உள்ளன. இதை ரிபீட் மோடில் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். பூஜை மண்டபத்திற்கு தளபதியின் பிரமாண்டமான நுழைவு மிகவும் சிறப்பாக அமைந்த்தது. மன்சூர் அலிகான், அர்ஜுன், சாண்டி மாஸ்டர் ஆகியோரும் இருந்தனர். ஆனால் அந்த நிகழ்ச்சியை திருடியவர் வேறு யாருமல்ல, நம் அழகுராணி திரிஷா கிருஷ்ணன்தான்.

    தற்போது இந்த நிகழ்வின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அசத்தலான உள்ள அந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

  • ஏகே 62 திரைப்படத்தின் புதிய இயக்குனர் யார் தெரியுமா? வெளியான வைரல் அப்டேட்…

    ஏகே 62 திரைப்படத்தின் புதிய இயக்குனர் யார் தெரியுமா? வெளியான வைரல் அப்டேட்…

    ஏகே62ல் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக இயக்குனர் மகிழ் திருமேனி? வைரல் அப்டேட் இதோ…

    முன்னதாக 2019ல் விஜய்க்கும் மகிழ் திருமேனிக்கும் சந்திப்பு நடந்துள்ளது.அப்போது மகிழ் திருமேனி சொன்ன கதைக்கு விஜய் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் படத்தின் பணிகள் தொடரவில்லை.

    அஜித்குமார் நடிப்பில் ஜனவரி 11ஆம் தேதி வெளியான துணிவு திரைப்படம் Box Office Blockbuster Hit ஆனது. இதையடுத்து லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஏகே62 படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருந்தார்.

     

    இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் அரவிந்த் சுவாமி மற்றும் சந்தானம் முக்கிய வேடங்களில் நடிப்பது உறுதியாகியுள்ளது. கிரீடம், பில்லா படங்களுக்குப் பிறகு அஜித்-சந்தானம் இணையும் படம் என்பதால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது.

    இந்த நிலையில் தயாரிப்பு தரப்புக்கு கதை பிடிக்காததால் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியதாகவும், வேறு இயக்குனர் படத்தை இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தடம், தடையறத் தாக்க, மீகாமன், களத்தலைவன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி, அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கப் போவதாக சினிமா வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகின்றன.

    2019ஆம் ஆண்டு நடிகர் விஜய்யின் படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என்று செய்திகள் வெளியாகின. விஜய் – மகிழ் திருமேனி சந்திப்பு நடந்துள்ளது. அப்போது மகிழ் திருமேனி சொன்ன கதைக்கு விஜய் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் படத்தின் பணிகள் தொடரவில்லை. இந்நிலையில் நடிகர் விஜய்யிடம் மகிழ் திருமேனி சொன்ன மாஸ் கதை கூட அஜித்குமாரை வைத்து ஏகே 62 படமாக மாற்றப்படலாம் என சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

  • முதல் படமே தமிழில் தயாரிக்கும் நம்ம தல தோனி…

    முதல் படமே தமிழில் தயாரிக்கும் நம்ம தல தோனி…

    தோனியின் தலைமையில் இந்திய அணி 72 டெஸ்ட் போட்டிகளில் சுமார் 41 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார் , 200ல் ODI போட்டிகளில் 110 ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ளார்,அதேபோல் 60 T20I ஆட்டங்களில் 27 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் தனது ஓய்வை அறிவித்தார்.இருப்பினும் ரசிகர்களுக்காக ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.இவருக்கென சென்னையில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.வருகிற ஐபிஎல் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் சென்னைக்காக கடுமையாக பயிற்சி செய்து வருகிறார்.

    இந்நிலையில், தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தோனி என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் திரையுலகில் கால்பதிக்கத் தயாராக உள்ளனர்.

    தோனி என்டர்டெயின்மென்ட்-ன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், முதல் திரைப்பட அறிவிப்பு இன்று  மதியம் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது

    2019 ஆம் ஆண்டு முதல் அனைத்து முக்கிய மொழிகளிலும் படங்களை தயாரிக்கத் தொடங்கியது DEPL (Dhoni Entertainment Pvt Ltd). அந்நிறுவனம் தி ஹிடன் ஹிந்து (The Hidden Hindu) என்ற புராண அறிவியல் புனைகதையின் உரிமையைப் பெற்றது மட்டுமல்லாமல், இந்தியன் பிரீமியர் லீக்கை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படமான ரோர் ஆஃப் தி லயன் (Roar of the Lion) என்ற ஆவணப்படத்தையும் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

  • குடியரசு தினத்தில் ‘விடுதலை’ அப்டேட் – வைரலாகும் புகைப்படங்கள்

    குடியரசு தினத்தில் ‘விடுதலை’ அப்டேட் – வைரலாகும் புகைப்படங்கள்

    முன்னதாக டிசம்பர் 2022 இல், இயக்குனர் வெற்றி மாறன், விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘விடுதலை பார்ட் 1 & விடுதலை பார்ட் 2’ படப்பிடிப்பை முடித்திருந்தார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது படத்திற்கான டப்பிங் பணியை படக்குழுவினர் பூஜையுடன் தொடங்கியுள்ளனர்.

    இப்படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர், இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ஜெய மோகன் எழுதிய நாவலின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் வேடத்தில் நடிக்கிறார், சூரி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

    viduthalai group photo

    விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். சுவாரஸ்யமாக, இப்படம் விடுதலை பார்ட் 1 & விடுதலை பாகம் 2 என இரண்டு பாகங்களாக வெளியாகிறது. படத்தின் முதல் பாகம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது, விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

  • 1000 தியேட்டர்களில் 400 கோடி செலவில் ஆளவந்தான் ரீ-ரிலீஸ்!

    1000 தியேட்டர்களில் 400 கோடி செலவில் ஆளவந்தான் ரீ-ரிலீஸ்!

    விக்ரம் படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வந்த கமல்ஹாசன், அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர். விக்ரம் வெற்றிக்குப் பின்னர் அவரது படமான இந்தியன் 2, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் படத்தின் மீது மேலும் மக்கள் ஆர்வமாக உள்ளனர். இதற்கிடையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படங்கள் மீண்டும் வெளியிடப்படுவதால், மக்கள் மீண்டும் அவற்றைப் பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

    பாபா ரஜினிகாந்த் சமீபத்தில் மீண்டும் வெளியிடப்பட்டது, ஆனால் கமல்ஹாசனின் ஆளவந்தான் படமும் பின்னர் மீண்டும் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அறிவித்துள்ளார்.

    திரையுலகில் மிகவும் பிரபலமான கமல், பிரபலமான “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் மட்டும் தவறாமல் தலை காட்டிக் கொண்டிருந்தார். கடந்த ஆண்டு வெளியான விக்ரம் படம் பெரும் வெற்றி பெற்றதால் கமலின் மார்க்கெட் எகிறியது. இதனால், கிடப்பில் கிடந்த இந்தியன் 2 படம் மீண்டும் ஷூட்டிங் சென்றது. அதன்பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க கமல் ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது பழைய படமான ஆளவந்தான் மீண்டும் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    2001ல் கமல் நடிப்பில் ஆளவந்தான் படம் வெளியானது. இது சுரேஷ் கிருஷ்ணா இயக்கியது மற்றும் மனிஷா கொய்ராலா, ரவீனா டாண்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷங்கர் – எஷன் – லாய் கூட்டனி இசையமைத்த இந்த திரைப்படம் சுமார் 400 மில்லியன் ரூபாய் (US$6 மில்லியன்) உருவானது.

    அதிநவீன கிராபிக்ஸ் மற்றும் மோஷன் கன்ட்ரோல் கேமராக்கள் மூலம் மிரட்டலான காட்சிகள் உட்பட பல புதிய தொழில்நுட்பங்களை கொண்டு உருவாக்கினார் கமல். அவர் ஒரு திரைப்படத்தில் நந்துவாக நடித்தார், மேலும் அவரது பணிக்காக விருதுகளையும் பெற்றார். ஆனால், இப்படம் வெளியாகும் போது போதிய வரவேற்பைப் பெறாததால், விரைவில் மீண்டும் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

     

     

    இதுகுறித்து ட்வீட் செய்துள்ள தாணு, விரைவில் திரையரங்குகளில் உங்களை ஆள வருகிறான் என ஒரு போஸ்டரையும் ஷேர் செய்துள்ளார். அதில் வெல்லுவான் புகழ் அள்ளுவான் என்ற கேப்ஷனுடன் விரைவில் ஆயிரம் திரையரங்குகளில் அகிலமெங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளவந்தான் வெளியான போது பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும், அதன் பின்னர் படத்தின் மேக்கிங், டெக்னாலஜி குறித்து ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். அந்த வகையில் ரீ-ரிலீஸாகும் ஆளவந்தான் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் ரஜினியின் பாபா திரைப்படம் ரீ-ரிலீஸானது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஆளவந்தான் படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.