ஏகே62ல் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக இயக்குனர் மகிழ் திருமேனி? வைரல் அப்டேட் இதோ…
முன்னதாக 2019ல் விஜய்க்கும் மகிழ் திருமேனிக்கும் சந்திப்பு நடந்துள்ளது.அப்போது மகிழ் திருமேனி சொன்ன கதைக்கு விஜய் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் படத்தின் பணிகள் தொடரவில்லை.
அஜித்குமார் நடிப்பில் ஜனவரி 11ஆம் தேதி வெளியான துணிவு திரைப்படம் Box Office Blockbuster Hit ஆனது. இதையடுத்து லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஏகே62 படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருந்தார்.
#AK62 director #magizhthirumeni confirmed! #AjithKumar will work with Magizh!!! 💥💥💥
— Latha Srinivasan (@latasrinivasan) January 28, 2023
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் அரவிந்த் சுவாமி மற்றும் சந்தானம் முக்கிய வேடங்களில் நடிப்பது உறுதியாகியுள்ளது. கிரீடம், பில்லா படங்களுக்குப் பிறகு அஜித்-சந்தானம் இணையும் படம் என்பதால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் தயாரிப்பு தரப்புக்கு கதை பிடிக்காததால் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியதாகவும், வேறு இயக்குனர் படத்தை இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தடம், தடையறத் தாக்க, மீகாமன், களத்தலைவன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி, அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கப் போவதாக சினிமா வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகின்றன.
2019ஆம் ஆண்டு நடிகர் விஜய்யின் படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என்று செய்திகள் வெளியாகின. விஜய் – மகிழ் திருமேனி சந்திப்பு நடந்துள்ளது. அப்போது மகிழ் திருமேனி சொன்ன கதைக்கு விஜய் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் படத்தின் பணிகள் தொடரவில்லை. இந்நிலையில் நடிகர் விஜய்யிடம் மகிழ் திருமேனி சொன்ன மாஸ் கதை கூட அஜித்குமாரை வைத்து ஏகே 62 படமாக மாற்றப்படலாம் என சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.