விஜய் நடிப்பில் உருவாகும் ‘thalapathi 67’ படத்தின் படப்பூஜை நிகழ்ச்சியின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதை ரிபீட் மோடில் ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 67 படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்றது. தற்போது பூஜை வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், வீடியோ உடனடியாக வைரலாகி வருகிறது.
இப்படத்தின் அப்டேட் இந்த வாரம் வெளியாகும் என படக்குழு கூறியுள்ள நிலையில், அவர்கள் கூறியதை அப்படியே காப்பாற்றி ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர். இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர், இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலிகான், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், இயக்குனர் கவுதம் மேனன், அர்ஜுன் ஆகியோர் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில் படத்தின் நாயகி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தற்போது அது திரிஷா தான் என்பது உறுதியாகியுள்ளது. 14 வருடங்களுக்கு பிறகு விஜய் மற்றும் திரிஷா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இதற்கு முன் இவர்கள் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் பட பாணியில் டீசர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது பூஜை வீடியோ வெளியாகியுள்ளது. இந்நிலையில் டைட்டில் டீசர் பிப்ரவரி 3ம் தேதி வெளியாகும் என பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தளபதி 67 படத்தின் பூஜை வீடியோவில் நிறைய அழகான தருணங்கள் உள்ளன. இதை ரிபீட் மோடில் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். பூஜை மண்டபத்திற்கு தளபதியின் பிரமாண்டமான நுழைவு மிகவும் சிறப்பாக அமைந்த்தது. மன்சூர் அலிகான், அர்ஜுன், சாண்டி மாஸ்டர் ஆகியோரும் இருந்தனர். ஆனால் அந்த நிகழ்ச்சியை திருடியவர் வேறு யாருமல்ல, நம் அழகுராணி திரிஷா கிருஷ்ணன்தான்.
தற்போது இந்த நிகழ்வின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அசத்தலான உள்ள அந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.