சின்னத்திரை

சின்னத்திரையில் ரீஎன்ட்ரி கொடுக்கும் நாட்டாமை டீச்சர்… ரசிகர்கள் உற்சாகம்

  • January 28, 2023
  • 1 min read
சின்னத்திரையில் ரீஎன்ட்ரி கொடுக்கும் நாட்டாமை டீச்சர்… ரசிகர்கள் உற்சாகம்

இந்த சீரியலில் நாட்டாமை டீச்சரின் ரீஎன்ட்ரியை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள், அவருடைய கதாபாத்திரம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே…

என்னதான் திறமை இருந்தாலும், ரசிகர் பட்டாளம் அதிகமாக இருந்தாலும், ஒரு சிலரால் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. அதுதான் நம்ம நாட்டாமை டீச்சருக்கும் நடந்தது. இவரது இயற்பெயர் ரக்ஷா ராணி ஆனால் நாட்டாமை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

gemini oh podu song
Credits: API Tamil Songs YouTube channel

நாட்டாமை டீச்சர் என்று ரசிகர்கள் மத்தியில் செல்லமாக அழைக்கப்படும் நடிகை ரக்ஷா, ஜெமினி படத்தில் ஓ போடு என்ற பாடலை பாடி வைரலானார். தற்போது ஜீ தமிழ் சீரியலில் அறிமுகமாகிறார்.

நடிகையாக பலராலும் அறியப்பட்ட ரக்ஷா, பல வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக சீரியலில் நடிக்கிறார்.

அன்றைய இளமைக்காலம் முதல் இன்று வரை நாட்டாமை படத்தில் டீச்சர் என்றாலே நினைவுக்கு வரும் இவர் தற்போது சீரியலில் அம்மாவாக நடித்து வருகிறார்.

பல மொழிகளில் நடித்துள்ளார்

வெகு சிலரே அப்படியே இருக்கிறார்கள். எத்தனை வருடங்கள் கழித்து பார்த்தாலும் அதே மாதிரி தான் நடிகை ரக்ஷாவும். நாட்டாமி படத்தில் ஆசிரியராக நடித்தார். இந்தப் படத்தில் சரத்குமாரின் நடிப்பையும், அதன் படப் பாடல்களையும் மறக்க முடியாத ரசிகர்கள், ஆசிரியரை என்றும் மறக்க முடியாது என்றும் சொல்வார்கள். அந்தளவிற்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

1992 ஆம் ஆண்டு ஜானி வாக்கர் என்ற மலையாளப் படத்தில் அறிமுகமான அவர், தமிழில் முதல் முறையாக நாட்டாமை படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு நம்ம அண்ணாச்சி, ராசையா, கர்ணா, அவ்வை சண்முகி, காதல் கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி ஜெமினி படத்தில் ஓ போடு என்ற பாடலுக்கும் அவர் நடித்தது இன்னும் பலரால் மறக்க முடியாதது.

சீதா ராமன்

என்னதான் திறமை இருந்தாலும், ரசிகர் பட்டாளம் அதிகமாக இருந்தாலும், ஒரு சிலரால் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் தான் தற்போது சின்னத்திரையை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளார். அதுவும் முதன்முறையாக ஜீ தமிழில் அறிமுகமாகிறார்.

சீதா ராமன் சீரியலில் கதாநாயகியின் அம்மாவாக அவர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே சன் டிவி சீரியலான ரோஜாவில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் நடிகை ரக்ஷா பல வருடங்களுக்கு பிறகு சீரியலில் வருவது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம். தற்போது அவருக்காகவே சீரியலை பார்க்க தயாராக இருப்பதாக அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

About Author

tcu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *