வாரிசு படத்தில் தளபதி போல் ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடிய KPY பாலா  பட்டையை கிளப்பியுள்ளார்.

எந்த வாய்ப்புகளும் நம்மை தேடி வராது, நாம் தான் வாய்ப்பை தேடி செல்ல வேண்டும் .அப்படி வாழ்க்கையை தேடி சென்னை வந்த இளைஞர் தான் பாலா.எதாவது அங்கீகாரம் கிடைத்துவிடுமா என ஏக்கத்தில் சென்னை வந்த பாலா தனக்குள் ஆயிரம் சோகம் இருந்தாலும் பிறரை சிரிக்க வைக்கும் கருவியாக மாறினார்.விஜய் டிவியில் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அந்த நிகழ்ச்சியில் டைட்டிலயும் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வெற்றிபெற்றுள்ளார்.இன்று பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார் பாலா.

கலக்க போவது யார் நிகழ்ச்சியின் மூலம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார்.பின்னர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் வந்து நகைச்சுவை செய்து கொண்டு சென்ற பாலாவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிக பெரிய வாய்ப்பினை வழங்கியது.இந்த நிகழ்ச்சி மூலம் கோமாளியாக களம் இறங்கி குக்குகளை கலாய்த்து மக்களை சிரிக்க வைத்து நல்ல வரவேற்பினை பெற்றார்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாலாவின் நகைச்சுவைக்கு ரசிகர்கள் உண்டு. இவர் சீரியல் நடிகை ரித்திகா உடன் இணைந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமைத்துள்ளார் மேலும் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் ரித்திகா உடன் இணைந்து காமெடியில் கலக்கியுள்ளார்

பாலா அடிக்கடி நடனமாடி தனது திறமைகளை காண்பித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ போடுவது வழக்கம்.அந்த வகையில் தற்போது இவர் மரண குத்தாட்டம் போட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது.வீடியோவில் பாலா வாரிசு படத்தில் தளபதி விஜய் ரஞ்சிதமே பாடல் இறுதியில் நிற்காமல் ஒரே டேக்கில் நடனமாடி அசத்தியிருப்பார்,தற்போது இவரும் அதே போல நிற்காமல் நடனமாடி பட்டையை கிளப்பி இருக்கிறார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் பயங்கர வரவேற்பினை பெற்றுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Bj Bala (@bjbala_kpy)

By tcu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *