சின்மயி கண்டனம் – பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய பாடல்கள் ‘மகாராஜா’ 2024 படத்தை நான் பார்க்கமாட்டேன் !
சின்மயி கண்டனம்:
பாடகி சின்மயி , வைரமுத்து எழுதிய பாடல்கள் நடித்துள்ள விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘மகாராஜா’ படக்குழுவினரை கடுமையாக விமர்சித்துள்ளார். பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட பாடலாசிரியர் வைரமுத்து தான் இந்த படத்திற்கு பாடல் எழுதியிருப்பது தனக்கு அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைரமுத்து மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. 2018-ம் ஆண்டில் #MeToo இயக்கத்தின் போது, பாடகி சின்மயி தன்னை வைரமுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வெளிப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பதினெட்டுக்கும் மேற்பட்ட பெண்கள் வைரமுத்து மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை வைரமுத்து மறுத்துள்ளார்.
இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற கருவை மையமாகக் கொண்ட ‘மகாராஜா’ படத்திற்கு பாடல் எழுதியிருப்பது தன்னை மிகவும் வேதனைப்படுத்துவதாக சின்மயி எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : மஹாராஜா ஜூன் 14 வெளியீடு ஒரு முன்னோட்ட பார்வை – A preview of Maharaja’s June 14 release
“மகாராஜா படத்தில் வைரமுத்து பாடல் எழுதியிருப்பதை இப்போதுதான் அறிந்துகொண்டேன். பாலியல் வன்முறை பற்றி பேசும் படத்திற்கு பாடல் எழுதுவதற்கு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரை தேர்வு செய்திருப்பது தமிழ் சினிமாவின் மோசமான பழக்கம்தான்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த படத்தை தான் பார்க்கப்போவதில்லை என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
“இந்த படத்தை பார்க்கப்போவதில்லை என்று நினைக்கிறேன். ஆனால், பத்திரிகையாளர் ஆஷா மீரா இந்த படம் பற்றிய தனது உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்காக துன்புறுத்தப்பட்டதையும் இப்போதுதான் அறிந்துகொண்டேன். சினிமாவில் இருக்கும் அதிகாரம் படைத்தவர்கள் சிறப்பாக செய்வார்கள் என்று நம்பிக்கொண்டிருந்தேன், ஆனால் மீண்டும் ஏமாற்றம் அடைந்தேன். எப்போதாவது, எங்காவது இதற்கு விளைவு கிடைக்குமா என்று யோசிக்கிறேன். துன்புறுத்துபவர்கள், பாலியல் குற்றவாளிகளை ஊக்குவிப்பவர்கள் அனைவருக்கும் தக்க பாடம் கிடைக்க வேண்டும்” என்று அவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
சின்மயி இந்த பதிவு தமிழ் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: விஜய்சேதுபதி மகன் சூர்யாசேதுபதி நடிக்கும் பீனிக்ஸ் டீஸர் வெளியீடு 2024 !