Tag: actor manobala

  • நடிகர் மனோபாலாவின் தற்போதைய நிலை

    நடிகர் மனோபாலாவின் தற்போதைய நிலை

    நடிகர் மனோபாலாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர்களில் ஒருவர் மனோபாலா. சமீபத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    manobala in hospital

    அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்து குணமாகி வரும் நிலையில் நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ் முருகன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

    மனோபாலா சிகிச்சை பெற்றதற்கான எந்தவித அறிகுறியும் இல்லாமல் பூச்சி முருகன் அவர்களிடம் உற்சாகமாக உரையாடியுள்ளார். இவர்கள் இருவரின் இந்த புகைப்படம் வைரலாக பரவி வரும் நிலையில், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

    manobala

    மனோபாலா சிகிச்சை முடிந்து இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப உள்ளார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.