Tag: கவுண்டம்பாளையம்

  • “கவுண்டம்பாளையம்” படம் தடையா! நடிகர் ரஞ்சித் போராட்டம்

    ‘கவுண்டம்பாளையம்’ திரைப்படம் வெளியீடு தள்ளிவைப்பு: நடிகர் ரஞ்சித் புகார்

    கோவை: நடிகர் ரஞ்சித் இயக்கி, நடித்துள்ள ‘கவுண்டம்பாளையம்’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டி, படத்தை திரையிட விடாமல் தடுப்பதாக ரஞ்சித் குற்றம் சாட்டியுள்ளார்.

    ஜூன் 5ம் தேதி வெளியாகவிருந்த “கவுண்டம்பாளையம்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் ரஞ்சித் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்,பட வெளியீட்டில் சிக்கல்கள் இருப்பதால், தமிழக முதல்வர் மற்றும் செய்தித் துறை அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளதாகவும் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

    “நாடகக் காதல் மற்றும் பெற்றோரின் வலியை பற்றிய கதை என்பதால், படத்திற்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்பு வருகிறது. என் படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவரும் சாதாரண விவசாயிகள் தான். கோடீஸ்வரர்கள் அல்ல. நான் பிறந்த மண்ணில் எடுத்த திரைப்படம் வெளியாகாதது மிகுந்த வருத்தமாக உள்ளது” என்று ரஞ்சித் கூறியுள்ளார்.

    சென்சார் சான்றிதழ் பெற்றும் படத்தை வெளியிட முடியவில்லை என்பதால், யார் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதை சொல்ல விரும்பவில்லை என்றும், தமிழக அரசின் அனுமதி பெற்று விரைவில் படத்தை வெளியிடுவேன் என்றும் ரஞ்சித் உறுதியளித்துள்ளார்.

    மேலும் படிக்க : டெட்பூல் & வோல்வரின் – தமிழ் ரசிகர்களுக்கு விருந்து

    படத்திற்கு எதிர்ப்பு காரணம்

    “கவுண்டம்பாளையம்” திரைப்படம், 1990களில் நடந்த ஒரு நாடகக் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டது. படத்தில் சில சமூக சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சில அமைப்புகள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    படத்தின் எதிர்காலம்

    தமிழக அரசின் தலையீட்டிற்குப் பிறகு, “கவுண்டம்பாளையம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.